தந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை

Oleh: Arulezhilan
June 25, 2018

உங்களுக்கு தந்திரங்கள் தெரியும்
அது ஒரு வித்தை அந்த வித்தைக்கு
இரு கோட்பாட்டுக் கட்டுரைகள்
மூன்று அறிவுரைக்களஞ்சியம்
நான்கு உன்னதங்களை உறுதி செய்யும் கட்டளைகள்
என….

எப்போது எதை எப்படி கையாள வேண்டும் என்ற வித்தை உங்களுக்கு கைவரப்பெற்றிருப்பது
உங்கள் வரப்பிரசாதம்
அதை நீங்கள் பிரயோகிக்கலாம்
தவறில்லை
ஆனால், நீங்கள் எதுவும் நடவாதது போல
பாவிப்பதும்
உலகம் உங்களை தண்டிக்க காத்திருப்பது போல
கற்பித்துக் கொள்வதும் வித்தையின் ஒரு வகை
முதல் வித்தையை எனக்குக் கடத்திய போதும்
நானும் அதே சர்க்கஸ் கூண்டிற்குள் நிறுத்தப்பட்ட போதும்
மூன்றாமவன் அறிந்திருக்கவில்லை இந்த வித்தைகளை
நீங்கள் பெரும் வித்தைக்காரர் என்பதை இந்த உலகிற்கு நிரூபித்திக் கொண்டே இருங்கள்
காயங்கள் வித்தைகளால் சகலருக்கும் உருவானதானது இப்படியே!

Tags:

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply