ஜல்லிக்கட்டு அனைவருக்குமான பாடம்!

Oleh: Arulezhilan
January 22, 2017


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண் தெரியாத மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைக்காக போராடினார்கள். அவர்களை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை அவர்களை நள்ளிரவில் சுடுகாட்டில் இறக்கி விட்டு வந்தார்கள். கடைசி வரை அவர்களின் கோரிக்கையை ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை.
#
இடிந்தகரை மக்களை அடித்து உதைத்து அந்த ஊரில் குண்டு வெடிக்க வைத்து பல கொலைகளைச் செய்து அந்த ஊரின் அமைதியையே கெடுத்தார்கள். இன்று வரை அம்மக்களால் மீள முடியவில்லை. உளவுத்துறையின் உதவியோடு நடத்திய அநியாயத்தை அன்று உலகமே வேடிக்கை மட்டும் பார்த்தது.
#
முல்லை அணை உரிமைக்காக போராடிய மக்களின் கால்களை உடைப்பேன் என்று வெளிப்படையாக அறிவித்து அடித்தார்கள்.

#
மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்த நிலையில் அவர் உடல் நலம் இன்றி இருந்ததை பயன்படுத்திய பன்னீரும் அவரது அமைச்சர்களும் அத்தனை திட்டங்களையும் ஆதரித்தார்கள்.
#
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்ற போது ஏளனம் செய்தார்கள் அமைச்சர்கள்.
#
ஏற்கனவே வறுமையில் உழலும் மக்களின் பாக்கெட்டில் இருந்த 50, ரூபாய் நூறு ரூபாயைக் கூட கொடூரமாக திருடியது மோடி கும்பல். மக்களிடன் எழுந்த அதிருப்தியை அதிமுக கண்டு கொள்ளவில்லை. வரவேற்றது. திமுக முதலில் வரவேற்றது பின்னர் எதிர்த்தது.
#
அதற்காக போராடிய சிபிஎம் தோழர்களான பெண்களை பாலியல் இழிவு செய்து மண்டையை உடைத்தது.
#
சசிபெருமாளை சாக விட்டது, கோவனை கைது செய்தது,

இப்படி ஒன்றா இரண்டா.

இதை ஊடகங்கள் தட்டிக் கேட்கும் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் ஊடகங்களோ இந்த கும்பலின் முதுக்குக்குப் பின்னால் இருந்து செய்திகளை வழங்கினார்கள். ஊடகங்களை விமர்சிக்கும் பதிவுகளுக்கு அபரிவிதமாக ஆதரவே இதைக் காட்டுகிறது.

இந்த வெறுப்புதான் கொதிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துள்ளது. மோடியை கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். பன்னீர் செல்வம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமே அல்ல, வெறுப்பு மக்களை பன்றிகளைப் போல கருத வேண்டாம் என்கிற எச்சரிக்கை. பன்னீருக்கு மட்டுமல்ல அரசியல் களத்தில் காலை,மதியம், மாலை என மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இது எச்சரிக்கையாக அமையட்டும்!

Category: முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply