சுவாதி கொலை சில கேள்விகள்?

Oleh: Arulezhilan
July 1, 2016

ஒரு கொலை நடந்து முதல் மூன்று மணி நேரம் மிகவும் முக்கியம். அதில் ரயில்வே போலீசார் கோட்டை விட்டிருக்கிறார்கள். இந்தக் கொலை சென்னை காவல் வரம்பினுள் நடந்திருந்தால் கொலை நடந்த அன்றே கூட கொலையாளியை பிடித்திருப்பார்கள். நமது காவல் துறை, அவர்களின் விசாரணை முறைகளிலும், அரசியல்வாதிகளிடம் அவர்கள் மண்டியிடும் போக்கிலும் நமக்கு விமர்சனங்கள் இருந்த போதிலும் விசாரணை நுட்பங்களில் தமிழக காவல்துறையினர் மிகச் சிறந்தவர்கள்.

சுவாதியின் மொபைல் போன் கொலையாகி அடுத்த சில மணி நேரங்களுக்கு செயல்பட்டதாக ஒரு தகவல் வெளியாகிறது.அந்த மொபைல் போன் இறுதியாக செயலிழந்த இடத்தில்தான் கொலையாளி ரிகாக்ஸ் ஆகி யிருக்கிறார். நிச்சயம் சுவாதி ஆண்டிராய்ட் போனையே பயன்படுத்தியிருப்பார். மற்ற பட்டன் போன்களைப் போல அவளவு எளிதில் அதை ஆப்ஃ பண்ண முடியாது என்னும் நிலையில் கொலையை செய்து விட்டு அவசரமாக வெளியேறிய கொலையாளி ஒரு இடத்தில் செட்டில் ஆன பின்னர் ஆண்டிராய்ட் போனுக்குள் சென்று ஆப்ஃ செய்திருக்கிறார்.
இந்தக் கொலையைப் பொருத்தவரை கொலையாளி சுவாதிக்கு தெரிந்தவராகவோ, ஒரு முறையேனும் சுவாதியின் தொலைபேசிக்கோ, பேஸ்புக் கணக்கிற்கோ எந்த வடிவில் தொடர்பு கொண்டவராக இருந்தாலும் அவரை இந்நேரம் கைது செய்திருக்க முடியும். கொலையாளி அவர் ஏற்கனவே சுவாதியை அதே ரயில் நிலையத்தில் கன்னத்தில் அறைந்தவராக இருந்த ஒரே நபர்தான் என்றால் அவர் வேறு யாரோ ஒருவரின் ஏற்பாட்டின் பெயரிலெயே இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும்.

நிச்சயம் அலுவலகம், வசித்த வீட்டின் அருகே உள்ளவர்கள் சுவாதியோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்தக் கொலையில் நேரடியான அதாவது கொலை செய்த நிகழ்வில் தொடர்பிருந்தால் இந்நேரம் தூக்கி உள்ளே வைக்கப்பட்டிருப்பார்கள் அப்படி என்றால் யார்தான் சுவாதியை கொன்றிருக்க முடியும்?
இந்தக் கேள்வி குடைகிறது…

#
பிலால் மாலிக் என்பவர் தான் கொலையாளி என்று முதல் முதலாக முகநூலில் கிளப்பி விட்டர் யார் அவர் என்ன நோக்கத்திற்காக ஒரு முஸ்லீம் பெயரைச் சொன்னார்.

#
உண்மையிலேயே பிலால் மாலிக் என்னும் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ யாரேனும் இருக்கிறார்களா?

#
சுவாதியின் உறவினர்களைப் பொருத்தவரை அவர்கள் இந்த விசாரணையில் ஆர்வம் காட்டுகிறார்களா? அவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் சுவாதியின் படுகொலைக்கு நீதி வேண்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கோருவதை விட்டு விட்டு சுவாதியின் குணநலனை நிறுவ முயல்கிறார்கள். மகளையே இழந்து நிற்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படி வெளிப்படும் என்று உளவிய ரீதியாக ஆராய்ந்தால் இதில் ஏதோ உறுத்திக் கொண்டிருக்கிறது.

#
சுவாதியின் உறவினர்கள் போலீசார் விசாரணை என்ற பெயரில் கேள்விகளைக் கேட்டு துன்புறுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாத வாதம். இந்தக் கொலை தொடர்பாக முதன் முதலாக ஊடகங்களிடம் பேசிய ரயில்வே காவல் அதிகாரி ஆனி “ இது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது” என்று சொன்னார்.
#
இந்தக் கொலை விசாரணையை சுவாதியின் வீடு, வசித்த தெரு, அலுவலகம் இங்கிருந்துதான் துவங்க முடியுமே தவிற கன்னியாகுமரி வள்ளுவர் சிலையின் கீழ் நின்று விசாரணையை துவங்க முடியாது, காவலர்கள் தங்களை சுதந்திரமாக விசாரிக்க சுவாதியின் குடும்பத்தினர் ஒத்துழைத்தால் மட்டுமே தங்கள் மகளைக் கொன்ற கொளையாளி யார் அவர்களின் நோக்கம் என்ன என்பது தெரிய வரும்.

#
மிக முக்கியமான இந்தக் கொலை மிக நுட்பமாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது அது எந்த அளவுக்கு என்றால் கொலை செய்யப்படும் நேரம், இடம் அது எந்த காவல்வரம்பினுள் வரும் அதனுடைய எல்லை என்ன? கொலை நடந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்ல எவளவு நேரம் ஆகும் என்கிற மிகத் தெளிவான திட்டங்களோடு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.கொலையாளி விடியோவில் பதிவான அதே உடையோடு நுங்கம்பாக்கத்தில் இருந்து சூளைமேட்டை நோக்கிப் போய் அங்கிருந்து உடையை மாற்றி விட்டு வேறு எங்காவது நகர்ந்திருக்கலாம்.

#

கொலையாளி அணிந்திருக்கும் சட்டை புதியது. அநேகமாக அவருடைய சோல்டர் பை கூட புதிய பையாக இருக்கலாம். அவரது நடை மிகவும் நேர்த்தியாக இருப்பதும், உடல் வாகும் அவர் உடற்பயிற்சி தற்காப்பு கலைக பயிற்சிகளில் கைதேர்ந்தவராகவே இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

#

பெரும்பலான குற்றவழக்குகளில் மொபைல், சமூக வலைத்தளங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மூலமே பல உண்மைகள் தெரிந்து விடும் போது ஒரு சிசிடிவி பதிவைத் தவிற வேறு எதுவுமே இல்லை என்றால் இந்தக் கொலையின் நுட்பம் மிகத் தீவீரமானது.

#
அந்த நபரின் உடல் வாகு, நடை எல்லாம் அவர் நன்கு பயிற்சி பெற்றவர் போல் உள்ளது.மிகத் தெளிவான மார்ச் பாஸ்டின் நடை அவருடையது.

#

பெரிதாக துப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ஒரு கொலை வழக்கை ஆரம்பத்தில் இருந்துதான் துவங்கி நடத்த முடியும்.அப்போதுதான் காரணம் தெரியும், காரணம் கண்டு பிடிக்கப்படாதவரையில் கொலையாளியை நெருங்குவது கடினம்.சுவாதியின் கொலையில் உண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். விசாரணையை துவங்கும் இடத்திலேயே தடங்கல் விழுந்திருக்கிறது. காவல்துறையின் கைகளைக் கட்டுவது யார்?

Tags: , , , ,

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply