திப்புவை நான் தொலைத்து விட்டேன்.

Oleh: Arulezhilan
August 12, 2013

பெரியார் வேடம். -பொன்னிலா.

பொன்னிலாவுடைய பள்ளியில் இன்று குழந்தைகளுக்கு மாறு வேடப் போட்டி. பெயர் கொடுத்து விட்டார் பொன்னிலா ஆனால் என்ன வேடம் போடவென்று தெரியவில்லை. இம் மாதிரி மாறுவேடப் போட்டி என்றாலே ஒரு பிம்பம் இருக்கும் இல்லையா? அதனால் ஒரு நவீன தமிழ் முகத்தை தெரிவு செய்யலாம் என நினைத்தோம்.

’அவ்வை’

’பாரதி தாசன்’

‘மருது பாண்டியன்’

ம் ஹூம்…எதுவும் தோராயமாக இருக்கிறதே தவிற துல்லியமாக இல்லை.

ஒரு வழியாக பெரியாரை தெரிவு செய்தோம். நவீனத்துவ அரசியல் அடையாளம் என்று தேடிய போது உண்மையில் தமிழில் பெரியாருக்கு நிகராக யாருமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. பெரியாரோட முகம்.. அந்த வெண் தாடி அழகு உண்மையில் சின்னக் குழந்தைகளுக்கு பொருந்தும் என்பது என் அபிப்பிராயம்.

ஒரு காஸ்டியூம் கடைக்குப் போனோம். அங்கே ஏராளமான பெற்றோர் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கவும், விக் வாங்கவும் வந்திருந்தனர். நீலா கடைக்காரரிடம் ‘தந்தை பெரியார்’ என்றார். அங்கு நின்றிருந்த பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

ஜவஹர் லால் நேரு.

‘’இப்பெல்லாம் யாருங்க பெரியார் டிரெஸ் கேட்குறாங்க. எங்க கிட்ட விக்கும். முடியும், கண்ணாடியும் கோலும் இருக்கு. நீங்க சட்டையும். வேட்டியும் ரெடி பண்ணிக் கோங்க’’ என்றார் கடைக்காரர்.

‘’நாங்கள் அழகான ஒரு கருப்புச் சட்டையும், வேட்டியும் தயார் பண்ணி பொன்னிலாவுக்கு மாட்டி விட்டோம்” பெரியாரோட கொள்ளுப் பேத்தி மாதிரி இருந்தது. பின்னர் டயலாக் எல்லாம் சொல்லிக் கொடுத்தோம். சில பெரியாரோட வீடீயோக்களையும். புகைப்படங்களையும் அவளுக்கு போட்டுக் காட்டி தேத்தினோம்.

இன்று காலையிலெயே பள்ளியில் கூடிய போது. அந்தப் பரந்த ஆடிட்டோரியத்தில் சில நூறு மாணவிகள் பார்வையாளர்களாக இருந்தனர். 10-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவிகள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு வகுப்பாம். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை கைதட்டவும், பொன்னிலா மேடைக்கு வந்தவுடன் ஸ்பெஷல் எபெக்ட் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தேன் என்பதெல்லாம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாத ரகசியம்.

வேடமணிந்து வந்திருந்த எல்லா குழந்தைகளையும் ஒரு இடத்தில் கூட்டமாக மந்தைப்படுத்தியிருந்தனர். வகுப்பு வாரியாக மாணவிகள் மேடைக்கு வந்தனர்.

காந்தி

நேரு

இந்திரா

வல்லபாய் பட்டேல் (இவர் எல்லாம் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து பார்த்தாலும் நினைவு வரவில்லை)

திருப்பூர் குமரன், (திருப்பூர் குமரனும், கொடி காத்த குமரனும் பக்கத்து பக்கத்து தெருக்காரர்கள் என்றுதான் நான் ரொம்ப நாள் நம்பிக் கொண்டிருந்தேன்.

நேதாஜி

என்று வரிசையாக வந்தார்கள். அநேக குழந்தைகள் காந்தியடிகள் வேடமிட்டு ‘’பாரத் மாதா கீ ஜே” என்று மழலையாக சொல்லிச் சென்றார்கள். நேரு, இந்திரா, எல்லாம் அடுத்து செல்வாக்குச் செலுத்தியவர்கள்.

அனால் காந்தி குடும்பத்தின் வாரிசுகளை எல்லாம் வீழ்த்தி மிக மிக அதிகமாக பெண் குழந்தைகள் அணிந்திருந்த வேடம் ஜான்சி ராணி. எப்படி இடையில் ஜான்சி ராணி இவ்வளவு வாக்குகளைப் பெற்றார் என்பது தெரியவில்லை. காந்தியே தோற்றுப் போகுமளவுக்கு ஜான்சி ராணிகள் வித விதமாக வந்தார்கள். பல ஜான்சி ராணிகள் மேடையேறுவதற்குள் சோர்ந்து கேடயத்தை தலைக்குள் வைத்து தூங்கத் துவங்கியிருந்தனர். பல ஜான்சிகள் ததும்பி அழத் துவங்கி விட்டனர். திணறிப் போன குழந்தைகளை மேடைக்கு அருகிலேயே நின்றிருந்த மிஸ்கள் … நன்றி சொல்லு, நன்றி சொல்லு … என்று டிக்டேட் பண்ணி மேடையை விட்டு துரத்துவதிலேயே குறியாக இருந்தனர்.

தமிழ் முகங்களைப் பொருத்தவரை பாரதியார்,. காமராஜர். போன்று ஒரு சிலர் வந்தார்கள்.

ஆனால் பெரியார் வேடத்தில் பொன்னிலாவைத் தவிற வேறு ஒரு குழந்தையும் இல்லை. அவளுக்குச் சொல்லிக் கொடுத்த அந்த டயலாக்கை மிக சத்தமாக ஆனால் இயல்பாகப் பேசினாள் இப்படி “ என் பெயர் ஈ.வே, ராமசாமி. என்னை வைக்கம் வீரர் என்று அழைப்பார்கள். பெண் கல்வி,. சாதியொழிப்பு” என் இரு கண்கள். நன்றீ வணக்கம்… என்று பேசி முடித்து வந்து விட்டாள்.

பெரும்பலான குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசின. ஆனால் சோகம் என்னவென்றால் ஆங்கிலத்தில் பேசிய குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகளால் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வாக்கியங்களை முழுமையாகப் பேச முடியவில்லை. அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த டயலாக்குகளை யோசித்துக் கொண்டிருந்த போதே ஆசிரியைகள் … போதும் நன்றி என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் பாரதியார் தொடங்கி தமிழில் பேசிய பெரும்பலான குழந்தைகள் தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை மிக மிக தெளிவாகப் பேசி கைதட்டல்களைப் பெற்றனர்.

வெளியில் வந்த போது இந்திராவும், நேருவும், காந்தியும். பசியால் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவசர அவசரமாக ஊட்டி பள்ளி உடைகளை மாற்றி வகுப்பறைகளுக்கு அவசரமாக அனுப்பிக் கொண்டிருந்தனர் பெற்றோர்.

ஒரு நண்பர் வந்து ‘’உங்க பாப்பா பெரியார் மாதிரி அழகா பண்ணினா ‘’ என்று அவளை பாராட்டினார். ‘’உங்க பாப்பா என்ன பண்ணினா” என்று கேட்டேன்…

’திப்பு சுல்தான்’ என்றார்… கொஞ்சம் கலங்கித்தான் போனேன்..

களைத்துப் போன ஜான்சி ராணி.

மைசூர் சமஸ்தானத்தின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்களைத் திரட்டி தென்னிந்தியாவில் பிரிட்டீஷாருக்கு எதிராக மிகப்பெரிய படையைக் கட்டியவன் அல்லவா திப்பு. அது கூட விஷயமில்லை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணியும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்ட (நாயர், நாடார், ஈழவர், உள்ளிட்ட பல சமூகங்களுக்கு மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டது) போது அதைக் கண்டித்து கடிதம் எழுதிய திப்புவின் வரலாறு அவன் முஸ்லீம் என்பதால்தானே மறைக்கப்பட்டது. திப்புவாக வேடமணிந்த அந்தக் குழந்தை முஸ்லீம் அல்ல ஒரு அழகான இந்துக் குழந்தை. அவள் வரலாற்றை மீட்டிக் கொண்டிருப்பாள் . நான் புகைப்படம் எடுக்க விரும்பினேன் ஆனால் அதற்கும் அவள் வேடம் கலைக்கப்பட்டிருந்தது. உண்மையில் நான் திப்பு சுல்தானை தொலைத்து விட்டேன்.

Tags: , , , , ,

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply