ஒரு உதைக்கு எத்தனை இட்லிகள் கேப்டன்?

Oleh: Arulezhilan
October 28, 2012

எண்பதுகளில் ‘சந்தோசக் கனவுகள் ’என்றொரு படப்பிடிப்புக்காக எங்கள் ஊருக்கு விஜயகாந்த் வந்திருப்பதாக கேள்விப்பட்டவுடன் ஷுட்டிங் பார்க்க ஓடியதாக நினைவு. ஆனால் நான் விஜயகாந்தைப் பார்த்தேனா இல்லையா? என்பது நினைவில்லை சிறுவன் என்பதால் துரத்தி கூட விட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.அன்று நான் பார்க்க விரும்பி பார்க்க முடியாமல் போன விஷயகாந்த் இன்று எதிர்கட்சித் தலைவர். கட்சிக்குள் ஏற்படப்போகும் பெரும் பிளவை கொந்தளிப்போடு எதிர்கொள்பவராக இருக்கிறார். ‘’என் கட்சிக்காரர்கள் ஓடியது பற்றி நான் கவலைப்படவில்லை. 28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை. நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன். கடந்த திமுக ஆட்சியில் ஒத்த ஆளாக நின்று சமாளித்தவன்.// என்று பஞ்ச் பேசுகிறார் விஜயகாந்த்.

உண்மைதான் நமக்கு விஜயகாந்தை பிடிக்காது என்றாலும் அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. நான் நான்கு முறை அவரை சென்னையில் அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன்.அவரைப் பற்றி ஒரு நூல் எழுதிக் கேட்டதால் அவருடன் இரண்டு நாட்கள் சுற்றியிருக்கிறேன். அதற்குமேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாமல் வந்து விட்டதெல்லாம் தனிக்கதை என்றாலும் அதன் பிறகும் அவரை சந்தித்தேன். அதிலிருந்து நான் அவரிடம் தெரிந்து கொண்டது விஜயகாந்த் கடின உழைப்பாளி. எவர் ஒருவரையும் நம்பாமல் தன்னையும் தன் குடும்பத்தினரையும் மட்டுமே நம்பி உழைக்கும் மனிதர்.

ஒட்டு மொத்த அவருடைய வாழ்வு குறித்தும் அவர் பேசிய பல மணி நேர உரையாடல் என்னிடம் உண்டு. அதில் அவர் அரிசி ஆலையை நடத்திய விதம், அரிசி அளப்பது, அதை சந்தைப்படுத்துவது என விலாவாரியாக நுணுக்கமாக பேசினார். பின்னர் சினிமாவுக்கு வந்தது. ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தது, தன்னுடன் நடிக்க மறுத்த நடிகைகள், இழிவாக பேசிய நடிகைகள் , காதல் கதைகள், தனது காதல் அனுபவங்கள், தொடர்பாகவெல்லாம் அவர் பேசிய போது எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் பெரும் கடலில் தனியாக கப்பல் விட முயற்சிக்கும் அவரது உழைப்பு பிரமிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் அவர் படங்கள் அதிக விலைக்கு விற்பக்கப்பட்டது அரசியலுக்கு வருவதற்கு முன்னால் அவரது படங்களுக்குக் கிடைத்த ஒப்பனிங் பிரமிக்க வைக்கும் . அந்த வகையில் தனது பலம் என்று அவர் சொன்னது நண்பர்களை ஆமாம் நண்பர்களை மட்டுமே பலம் என்றார் அதுதான் உண்மையும் கூட நண்பர்களை மட்டுமே கூட வைத்திருந்தார்.அவர் அரசியலுக்கு வந்து மனைவியும் மச்சானும் பக்கத்தில் வந்த போது நண்பர்கள் விலகிச் சென்றார்கள். அரசியல் அறிவுரைக்கு பண்ருட்டி ராமச்சந்திரனைத் தவிற வேறு ஆட்கள் அவருக்கு தேவைப்பட வில்லை. அவருக்கு தேவைப்பட்டதெல்லாம் சில பவர் புரோக்கர்களும், இடைத் தரகர்களும், மாஃபா பாண்டியராஜன்களுன், அருண் பாண்டியன்களுமே, செலவு செய்யும் திராணி உள்ளவர்களுக்கே முன்னுரிமை என்னும் அடிப்படையில் தேர்தல் சீட்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு கட்சிக்கும் நிதி கொடுத்து சீட்டுக்காக காத்து நின்றவர்கள் எல்லோரும் கேப்டனின் கப்பலில் தொற்றிக் கொண்டார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் கோட்பாடுகள் ஏதுமின்றி எது பற்றி கவலையும் இல்லாமல், ப்ளா, ப்ளா அரசியல் கோட்பாட்டோடு குறிப்பாக எதிர்ப்பரசியலே இல்லாமல், கலைஞர், ஜெயலலிதா இருவரையும் திட்டுவதை மட்டுமே எதிர்ப்பரசியல் என நம்பி, அதிகளவு தொண்டர்களை இணைத்து பெரும் ஊடக ஆதரவோடு ஒரு கட்சி வளர்ந்தது என்றால் அது தேமுதிக மட்டுமே.

ஏனைய கட்சிகளை எல்லாம் கொல வெறியாக்கியது இதுதான். உண்மையில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளை எல்லாம் ஜஸ்ட் கிராஸ் பண்ணிவிட்டுச் சென்றார் விஜயகாந்த்.அநேகமாக தேமுதிகவின் ஏற்பட விருக்கும் பிளவை அனைத்து கட்சிகளுமே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.தங்களின் கோட்டை என்று நம்பப்பட்ட கனவுகளை தகர்த்தவனை ஆட்டம் காணச் செய்கிற அம்மாவைப் பார்த்து அச்சத்தோடும் உற்சாகத்தோடும் தலையசைக்கிறார்கள். ஆனால் இந்த நெருக்கடி விஜயகாந்தே தேடிக் கொண்ட ஒன்றுதான் . தொழிலதிபர்களை கட்சியில் இணைத்து நிதி தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பதவியும் வழங்கினால் என்ன நடக்குமோ அதுதான் விஜயகாந்ததிற்கும் நடந்தது. இதனால் தேமுதிகவிற்கோ, விஜயகாந்திற்கோ எந்த பாதிப்புகளும் இல்லை. இவர்களால் அந்தக் கட்சி வளரவும் இல்லை. வெற்றி பெறவும் இல்லை. விஜயகாந்தின் கவர்ச்சி அரசியலும் கூடவே கடின உழைப்பும்தான் அவருக்கு இந்த வெற்றியைக் கொடுத்தது.

அரசியலில் அவர் தன் ரோல்மாடலாக எம்.ஜி.ஆரைக் காட்டினார்.தன்னை கருப்பு எம்ஜீஆர் என்றும் சொன்னார். எம்.ஜீ.ஆர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை வாங்குவதில் ஆர்வம் கட்டினார். ஆனால் எம்.ஜீ.ஆர் உறவினர்கள் என்று சொல்லி எவரும் கட்சியை மேய அனுமதிக்கவில்லை என்பதை தன் வசதிக்கு மறந்து விட்டார். எம்.ஜீ. ஆருக்கு எப்போதுமே ஒரு பிம்பம் உண்டு.அவர் எல்லோரையும் அடிப்பார் பின்னர் ராமாவரம் தோட்டத்திற்குள் அழைத்து சாப்பாடு போடுவார்.

இந்தக் கதைகளை சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு இட்லிக்கு எம்ஜீ ஆர் எத்தனை உதை கொடுத்திருப்பார் என்பதுதான் இன்று வரை புரியவே இல்லை. அப்படி நம்பித்தான் விஜயகாந்தும் தன் கட்சித் தொண்டர்கள், சகாக்கள் மீது கை நீட்டத்துவங்கினார். உண்மையில் விஜயகாந்த் எம்.ஜி. ஆர் கிடையாது. எம்.ஜீ.ஆருக்கு அன்றைக்கிருந்த சூழலில் தமிழகம் முழுக்க செல்வாக்கிருந்தது. அரசியல் அனுபவம் மிக்கவர்கள் அவருடன் இருந்தார்கள். அவர் அமெரிக்காவில் இருந்த போது கட்சியைக் காப்பாற்றியவர்கள் நம்பிக்கைக்குரிய அந்த இரண்டாம் மட்டத் தலைவர்களே. அது போல கலைஞர் 13 -ஆண்டுகாலம் எதிர்கட்சித் தலைவராக இருந்து போதிலும் அவரால் அன்று கட்சியைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இன்று அவர் வளர்த்த வாரிசுகளிடமிருந்து கட்சியை காப்பாற்ற போராடுகிறார். இதே நிலைதான் நாளை உங்களுக்கும் வரும். செல்வமும், செல்வாக்கும், பதவியும் இருக்கும் போதே உங்களை விட்டுச் செல்கிறார்கள்.அவர்களைப் பொறுத்தவரை கட்சி என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.கட்சியை ஒரு பொறியல் கல்லூரி போலவோ கம்பெனி போலவே நடத்தக் கூடாது என்பதை உணருங்கள்.
நல்ல விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறார்கள் மைக்கேல் ராயப்பனும், அருண் பாண்டியன் உள்ளிட்டோரும். அந்த விலை அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விலை அல்ல, அதிக விலைகொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு செல்வாக்கும் இல்லை, அவர்கள் நிதி கொடுக்கிறார்கள். செலவு செய்யும் திராணியோடு இருக்கிறார்கள் என்றுதான் நீங்கள் அவர்களை கட்சியில் இணைத்தீர்கள். ஆனால் தேமுதிக அவர்களுக்கு சௌகரியமாக இல்லாத காரணத்தால்தான் இன்று தங்களை விற்று விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இப்போது அதிமுகவிற்கு தவ்விக் கொண்டிருக்கும் மைக்கேல் ராயப்பன் தொடங்கி நாளை இணையப் போகும் மாஃபா பாண்டியராஜன் வரை ஒவ்வொரு கட்சியாக சீட்டுக் கேட்டு அலைந்தவர்கள்தான் அவர்கள் .அதிமுகவிற்குக் கூட உண்மையாக இருக்க மாட்டார்கள். கேப்டன் ஒரு அரசியல் கட்சியை நடத்தும் உணர்வுக்கு வர வேண்டும்.

எதிர்கட்சித் தலைவர் பதவி என்ற ஒரு பதவியை பறி போவதைத் தவிற இதனால் உங்களுக்கோ உங்கள் கட்சிக்கோ எந்த விதமான சேதராமும் இல்லை. இடைத்தேர்தல் ஒன்று வந்து, தேர்தல் நியாயமாக நடந்தால் அதிமுக டெப்பாசிட் கூட வாங்காது. என்னும் நிலையில் இனி கூட்டணி மட்டுமே உங்களுக்குக் கை கொடுக்கும். அதுவும் திமுகவுடனான கூட்டணி வேறு வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.

கோபம் யார் மீது?

கட்சியினர் கைமீறிப் போவதை தாங்க முடியாத விஜயகாந்த் ஊடகவியலாளார்களை நாய்கள் என்கிறார். உண்மையில் அவர் பத்திரிகையாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் . இந்த கோபம் ஏன்? அவருடையை வாயைப் பிடுங்கி ஒரு பைட் எடுத்தாக வேண்டிய ஊடக நிர்ப்பந்தத்தில் உங்கள் முன்னால் மைக்கை நீட்டும் இந்த பத்திரிகையாளார்கள் அப்பாவிகள். உண்மையில் ஊதியத்திற்கு உழைப்பவர்கள் இவர்களை நாயென்று சொன்னது உங்களின் இயலாமையைக் காட்டுகிறது. அதற்காக நீங்கள் வருந்த வேண்டும்.நீங்கள் விரும்பிய படி உங்களைக் கொண்டு போயஸ் கார்டனில் நிறுத்தியது சில ஊடகவியலாளர்கள்தான், அவர்கள்தான் போயஸ்கார்டனுக்கும், உங்கள் அலுவலகத்திற்குமிடையில் ஓடியோடி உழைத்து கூட்டணி அமைத்துத் தந்தர்கள். இப்போது உங்கள் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக பிடுங்கிக் கொண்டு போயஸ் கார்டனில் நடுவதிலிலும் அவர்கள் கை உள்ளதாக நீங்கள் நம்புகின்றீர்கள். ஆனால் அவர்களா உங்களிடம் வந்து கேள்வி கேட்டார்கள். பதப்படுத்தப்பட்ட ஏசி அறைகளை விட்டு எப்போது அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். அந்த பவர் புரோக்கர்களை நம்பி அரசியல் செய்து விட்டு இப்போது நீங்கள் அவர்கள் மீதுள்ள கோபத்தை எளியவர்கள் மீது காட்டுகின்றீர்களே?

தொழிலதிபர்களைப் பற்றி வியந்து வியந்து எழுதுவதையே ஊடக தர்மமாகக் கொண்டிருக்கும் சிலர் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் யோக்கியமானவர்களும் உண்டு. அவர்கள் ரியல் ஜர்னலிஸ்டுகள், அவர்கள் இனிக்க இனிக்க உங்களுக்கு எண்ணெய் தடவ மாட்டார்கள். உங்கள் வீட்டு நாய் என்ன பிஸ்கட் சாப்பிடுகிறது என்று நான்கு பக்க ஸ்டோரி எழுத மாட்டார்கள். ஆனால் நீங்கள் நாயென்று சொன்னது அவர்களைத்தான். பவர் புரோக்கிங் செய்தவர்கள் இப்போது அமைதியாக இருப்பார்கள்.இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஜெயலலிதா பற்றி. முதுகில் குத்துவதும் உளைத்தவர்களின் காலை வாரிவிடுவதும் அவருக்கு கை வந்தக் கலை என்பதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

தவிறவும் நீங்கள் சின்மயியின் சித்தப்பனாக இருந்து நாயே என்றாலும் பேயே என்றாலும் எங்களுக்கெல்லாம் சூடு சொரணை வராது. அந்த வகையில் நீங்கள் பேசியது தவறு திருத்திக் கொள்ளுங்கள்.

(குறிப்பு- இதற்கொரு படம் தேடிய போது ஏழைக் கிழவியை கட்டிப் பிடிக்கும் ஸ்டில்லைப் போட்டால் நன்றாக இருக்கும் அதை கூகுளில் எடுத்த போது, இந்த புகைப்படத்தில் ஆபத்து உள்ளது என்று ரெட் சிக்னல் கொடுத்தது அதையும் சொல்லி விடுகிறேன்.
http://www.google.co.in/imgres?q=vijayakanth&num=10&hl=en&biw=1600&bih=799&tbm=isch&tbnid=isCSAo1XHQmJnM:&imgrefurl=http://123tamilgallery.com/vijayakanth/&docid=55Kzo_FOoTEFTM&imgurl=http://123tamilgallery.com/images/2010/09/vijayakanth-93.jpg&w=540&h=360&ei=K8iMUO3NFYq0rAfq6oH4Ag&zoom=1&iact=rc&dur=359&sig=100398217172916560213&page=1&tbnh=139&tbnw=209&start=0&ndsp=34&ved=1t:429,r:2,s:20,i:205&tx=115&ty=50)

Tags: , , , , ,

Category: அரசியல், கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

13 Comments

 • s.a.mahesh

  unmai

 • பழைய விஷயங்களை விட நமது நமது நினைவில் உள்ள சில விஷயங்களை நினைத்து பார்ப்போம் ……………….1991 தேர்தலில் திமுக இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது….1996 தேர்தலில் அதிமுக பொதுச்செயலளர் தொல்வியுற்றார் நான்கு இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது 1996-ல் ஜெயலலிதா வீட்டில் கோர்ட் நோட்டீஸ் ஒட்டப்பட்டு,தண்டோராவும் போடப்பட்டது ,வழக்குகள் பாய்ந்தது தனிநீதிமன்றமே அமைக்கப்பட்டது 2001-ல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார் 1996-2001 திமுக ஆட்சியில் இருந்த பொழுது அப்போது அமைச்சராக இருந்த முன்னாள் சட்ட பேரவை தலைவர் தமிழ்குடிமகன் அன்றும் இன்றும் திருமங்கலம் தொகுதி எம் எல் ஏ வாக உள்ள முத்துராமலிங்கம் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்……….
  2006-2011 திமுக ஆட்சியில் இருந்த பொழுது அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ க்கள்…….தொகுதி நன்மைக்காக முதல்வரை சந்தித்தோம் என்று கூறி மதுரை மேற்கு எஸ் வி சண்முகம்,திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன்,கோவில்பட்டி ராதாகிருஷ்ணன்,பெரம்பலூர் ராஜேந்திரன்,,,,,,மயிலாப்பூர் எஸ்.வி.சேகர் ,ஆட்சி முடிவில் ஆர் கே.நகர்,சேகர் பாபு ஆகியோர் தி மு காவில் இணைந்தனர்……..
  கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்,ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்,ராசா.தயாநிதிமாறன் ஊழல் குற்றச்சாட்டில் பதவி இழந்தனர்…….இப்படி பல அரசியல் நெருக்கடிக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் உள்ளன நிலையில் ,
  அந்த நேரங்களில் இருவரும் பத்திரிகையாளர்களை அழைத்து பேசினார்களே,தவிரகருணாநிதியோ,ஜெயலலிதாவோ….ஆவேசப்படவில்லை அரசியல் பக்குவத்துடன் நடந்து கொண்டனர்,
  ஆனால் விஜயகாந்த்……………………… விஜயகாந்த் பொதுவாழ்க்கைக்கு வந்த பின் பல இடங்களில் நடந்துகொள்ளும் விதம் விசித்திரமாக உள்ளது……கல்யாணம் முதல் கட்சி ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள் என எத்தனை முறை பத்திரிகையளர்களுக்கு இவர் அழைப்பு அனுப்பியுள்ளார் …..அப்பொழுதெல்லாம் பத்திரிகையாளர்கள் நாயாக தெரியவில்லையா…….?????
  எதோ ஒரு நாட்டு பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சிக்கு இவர் பத்திரிகையாளர்களை அழைத்தாரே அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் நாயாக தெரியவில்லையா…….?????
  கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தெரியாத இவரின் கேப்டன் டிவியில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களை நாய்கள் என்றுதான் அழைப்பாரா……கேப்டன் டிவி நிருபர்கள் யாரிடமும் கேள்வியே கேட்ப்பதில்லையா………??????????

 • எனது பொதுபுத்திக்கு பத்திரிக்கையாளர்கள் மீது காட்டப்பட்ட கோபம் சரியானதே என்று தோன்றினாலும் ஒரு தலைவனாய் அது செய்ற்பட ஏற்புடையதாய் இல்லாவிட்டாலும் ஒரு நடிக தலைவனாய் அது அவருக்கு உபயோகமாய் இருக்கும் இது விளம்பர யுகம். இதனால் இருட்டடிப்பு செய்யப்படுவது வைகோ தான். இவர் கவர்ச்சி விளம்பரத்திலேயே வளர்ந்துவிட்டார். மக்களை ஒன்று திரட்டும் போராட்டங்களை வைக்கோ முன்னெடுக்காவிட்டால் கவர்ச்சி அரசியல்வாதிகள் ஜெயிக்க அநேக வாய்ப்புகளும் இங்கே திறந்தே இருக்கின்றன..

 • சித்தன்

  மிக சரியான பார்வை அருள் !!
  மம்மி இவரை டம்மி ஆக்கி விடும் என்று நான் முன்னரே எதிர்ப்பார்த்தேன் . விரைவில் புதிய எதிர்க்கட்சி தலைவரை பார்க்கமுடியும் என நினைக்கிறேன் 🙂

 • anand

  nalla pathivu

 • You made some nice points there. I did a search on the subject matter and found most individuals will consent with your site.

 • Arul Ezhilan Pages cool post

 • Arul Ezhilan Pages cool post

 • Arul Ezhilan Pages Great stuff

 • I saw %BLOGPOST% great post

 • I witnessed this article great article

 • Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it or something. I think that you can do with some pics to drive the message home a bit, but instead of that, this is wonderful blog. A great read. I’ll certainly be back.

 • Working with regional law firms can be rewarding for various reasons.

  Groom! In the next two years nobody made a mistake ever – I was really impressed at
  how professional they all were. They were
  feeling wet and cold but it didn’t stop them from performing at their best during the challenges.
  Breitbart didn’t do anything by halves, and even his most ardent detractors had to admit that he had a highly developed, if not always funny,
  sense of humor…

Leave a Reply