தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..?

By: Arulezhilan

போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்…… தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது? சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, ...

தானே புயல் நிவாரண ஓவியக் கண்காட்சி.

By: Arulezhilan

தானே புயலில் வாழ்வாதரங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவ விகடன் ஏற்பாடு செய்து நடந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சியைக் காண சென்னை லலித் கலா அக்காடமிக்குச் சென்றிருந்தேன். தரைத் தளத்திலும் மேல் தளத்திலுமாக இரண்டு அரங்கங்களிலுமாக சுமார் சுமார் 300 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஓவியர்களில் எனக்குப் பழக்காமானவர்கள் மிகவும் குறைவு. ஓவியக் கோட்பாட்டுப் புரிதல் அதை விடக்குறைவு.கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் ஓவிய மரபில் கலந்தும் பிரிந்தும் போராடியும் ஒன்றை ஒன்று முந்தியும் சென்ற பல் வேறு ஓவியக் கோட்பாடுகளில் இருந்து உருவான சுமார் 300 ஓவியர்களின் படைப்புகளைக் காண நேர்ந்த அனுபவம் சிலிப்பானது.ஓவிய மரபின் வரலாறு நீண்ட பல் வேறு வாசலைக் கொண்டது. பழைய மரபு ...

‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்!

By: Arulezhilan

2017 - நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்கதை. மேற்கு தொடர்ச்சி மலையும், இலங்கைத் தீவும் முதுகு போல இருந்து இயற்கையாக பாதுகாக்கப்பட்ட பிரதேசமான குமரி மாவட்டத்தில் அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே வீசிய அரிதினும் அரிதான ஓகி இயற்கை அனர்த்தனம் வீசி ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஒகி புயல் வீசிய அடுத்த சில நாட்களில் ஒரு நள்ளிரவில் கிளம்பி அப்பகுதிக்குச் சென்றேன். அதே நாளில் நியூஸ் 18- குணசேகரன், பாரதி தம்பி, தயாளன் உட்பட அவர்களின் தென் மண்டல செய்தியாளர்களும் அங்கு வந்தார்கள். புதிய தலைமுறை செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், நெறியாளர் செந்தில் உள்ளிட்ட அவர்களின் செய்தியாளர்களும் அங்கு வந்தார்கள். இரு தொலைக்காட்சிகளும் ஓக்கி புயல் தொடர்பாக செய்த பதிவுகள்தான் வெகு மக்களிடம் ஓக்கி பாதிப்பு பற்றிய அவலத்தையும்,அதன் கோரமுகத்தையும் உலகிற்குக் காட்டியது. நான் அங்கு சில நாட்கள் சுற்றித்திரிந்தேன். வினவு தோழர்கள் ‘கண்ணீர் கடல் ‘ என்றொரு ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சென்னை திரும்பிய பின்னர் அரபிக்கடலோரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த ஓலம் என் நிம்மதியை குலைத்தது. எப்போதும் என்னை விட்டு ...

ரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா?

By: Arulezhilan

சமூக விரோதிகள் என்று தமிழக மக்கள் குறித்து குறிப்பிட்ட ரஜினியால் அம்மக்களை முட்டாளாக்க முடியவில்லை. ஆனால், ‘காலா’ திரைப்படம் அறிவுலகின் ஒரு பிரிவினரை முட்டாளாக்கி விட்டது. அவர்கள் ரஞ்சித்திற்காக களமாடுவதாக நினைத்துக் கொண்டு ரஜினிக்காக களமாடுகிறார்கள். அல்லது ரஜினியின் தமிழகம் குறித்த பார்வைகள் தொடர்பாக பெருமளவு மவுனம் காக்கும் அவர்கள் ஒரு பக்கம் ரஞ்சித்திற்காக காலா பார்க்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் தலித் வெறுப்பு ஒன்றையே தங்கள் சாதி இருப்பாகக் கொண்டோர் ரஞ்சித் மீது வன்மம் கொட்டுகிறார்கள். இந்த இரு தரப்பிற்கும் இடையில் வலதுசாரிகளை எங்கும் எப்போதும் எதிர்ப்போர் ரஜினியின் வலதுசாரிப்பார்வைகளை ஆபத்தானதாக கருதி அவரது அரசியல் வருகையையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவரது அரசியல் வருகைக்கு ‘காலா’ பயன்படும் என்பதால் காலாவை தனியாக விலக்கி வைத்து பார்க்க முடியாத பார்வையை முன் வைக்கிறார்கள். இயக்குநரும் நண்பருமான மீரா கதிரவரவன் ஒரு எல்லையை தீர்மானிக்கிறார். இப்படி, ///காலாவின் எல்லைக்குள் நின்றே ரஞ்சித்தை விமர்சிக்கவேண்டும். காலாவிற்கு வெளியே நின்றே ரஜினியை விமர்சிக்கவேண்டும்.// இப்படி ஒரு எல்லையை தீர்மானித்து அதை நம் தலையில் கட்டும் உரிமைதான் அறிவுலகில் பிளவை உருவாக்குகிறது. காலாவை விமர்சிப்போர் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிக்கிறவர்களே தலித் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி கொலைகளை மறைமுகமாக கருத்தியல் ரீதியாக ...

விவிலிய வாசிப்பும் கல்வியும்-1

By: Arulezhilan

சடங்காச்சாரங்களை பேண அனுமதி மறுக்கப்பட்ட அத்தனை சமூகங்களுமே தீண்டத்தாத சமூகங்கள்தான். மந்திரங்களை ஓதும் அனுமதியே இல்லாத போது வாசிப்பு எப்படி தமிழ் சமூகத்துக்கு சாத்தியமானது. விகடனில் நான் எழுதிய அந்த நாள் தொடருக்காக, 60-பதுகளில் இடிந்து விழுந்து பெண் மாணவிகள் பலியான மதுரை வ்கை நதிக்கரை சரஸ்வதி பள்ளிக்குச் சென்றேன். அப்போது மாணவிகளாக இருந்து தப்பிப்பிழைத்த பலர் இப்போதும் வசிக்கிறார்கள். அவர்கள் சொன்ன கதைகள் வேடிக்கையாக இருந்தது. பெண்கல்வி தமிழ் சமூகத்திற்கு பரவலாக சாத்தியமானது 60-பதுகளில்தான். முதல் தலைமுறையாக கல்வி கற்க வந்த மாணவிகள் பள்ளி இடிந்து விழுந்ததை சாபம், சாஸ்திரக்கேடு என்றெல்லாம் அப்போது ஓத பல பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் இருந்து விலக்கிக் கொண்டார்களாம். இந்த நிலையை விட மேம்பட்ட ஒரு நிலை குமரி மாவட்டத்தில் நிலவியது. 20-பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே அங்கு பெண் கல்வியை சீர்திருத்த கிறிஸ்தவத்தினர் கொண்டு வந்தனர். டதி கல்லூரியும் பள்ளியும் அங்கு நிறுவப்பட்டது. ஆனால், அந்த கல்வி முயற்சியின் துவக்கம் எதுவாக இருக்கும், நிச்சயம் அது விவிலிய வாசிப்பின் மூலமே சாத்தியமானது, மயிலாடி வேதமாணிக்கம் மூலம் ஒடுக்குமுறைகளைக் கடந்து வளர்ந்த சீர்திருத்த கிறிஸ்தவம் நாடார் இன மக்களை தோள் சீலைக் கலகம் செய்ய தூண்ட வில்லை. மாறாக அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் இயல்பாகவே கிளர்ச்சியை உண்டாக்கியது. பெருமளவு நாடார் இன ...